முகப்பு
செய்திகள்

மறக்குமா நெஞ்சம்: விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தினை பகிர்ந்த மார்க் ஆண்டனி பட தயாரிப்பாளர்! 

நடிகர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார் மார்க் ஆண்டனி பட தயாரிப்பாளர் வினோத் குமார். 

Updated On : 16 செப்டம்பர், 2023 at 8:25 PM
பகிர்:

நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

Advertisement

செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. படத்தின் ஆரம்பத்தில் நடிகர் விஜய்யிக்கு நன்றியும் தெரிவித்து இருந்தார்கள். ஆரம்பத்தில் படத்தின் டீசரை மார்க் ஆண்டனி படக்குழு நடிகர் விஜய்யிடம் காண்பித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் நடிகர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து, “இதுதான் எனக்கு மறக்குமா நெஞ்சம் மொமண்ட். இந்தக் கணத்தில் இருந்துதான் எல்லாமே சரியாக நடந்தது. மிக்க நன்றி விஜய் அண்ணா” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.