செய்திகள்

கால்சீட் கிடைத்துவிட்டது: வித்தியாசமாக அறிவித்த பிரதீப் ரங்கநாதன்-விக்னேஷ் சிவன்! 

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பை வித்தியசமாக வெளியிட்டுள்ளார்கள். 

DIN

போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அவர் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்திருந்தார்கள். இந்தப்படம் மிகப் பெரிய ஹிட் அடித்தது. பின்னர் நயன்தாராவை காலித்து திருமணமும் செய்து கொண்டார். கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம் 2022இல் வெளியானது. 

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது. பின்னர் ஸ்க்ரிப்ட் பிரச்னைகளால் படம் கைவிடப்பட்டது. மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ படத்தில் அஜித் நடிக்க உள்ளார். ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் இன்னும் ஆரம்பமாகவில்லை. 

அஜித் படம் கைவிடப்பட்ட பிறகு லவ் டுட்டே பிரதீப் ரங்கநாதன் வைத்து இயக்கப் போவதாக தகவல் வெளியானது. இந்தப் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியன்று விக்னேஷ் சிவன் பிறந்தநாளில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் டேட்ஸ் (பேரீட்சைப்பழம்) கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். டேட்ஸ் அதாவது தேதி கொடுத்துள்ளதைதான் இப்படி கூறியுள்ளதாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

லவ் டுடே படத்தின் மூலம் இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பிரதீப் மக்களிடையே பிரபலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

SCROLL FOR NEXT