செய்திகள்

அனிமல் படத்தின் வில்லன் இவர்தான்: படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்! 

நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

DIN

2017ஆம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி எனும் தெலுங்கு படத்தினை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இதில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. இந்தப்படம் தமிழ், ஹிந்தியில் ரீமெக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

இந்த இயக்குநரின் அனிமல் படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இதில் ராஷ்மிகா 'கீதாஞ்சலி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநரின் சொந்தத்  தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - அமித் ராய். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் மாஸ்டராக கலக்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் பான் இந்தியப் படமாக உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் வெளியாக இருந்த நிலையில் டிச.1ஆம் தேதி வெளியாகுமென இயக்குநர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

படத்தின் டீசர் செப்.28ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. டீசர் 2 நிமிடங்கள் 29 நொடிகள் இருக்குமெனவும் யு/ஏ தணிக்குழு சான்றிதழையும் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் பிரபல சன்னி தியோலின் சகோதரான பாபி தியோல் படத்தின் வில்லனாக நடித்துள்ளார். போஸ்டரில் ரத்தம் தெறிக்க வாயில் கை வைத்து ‘அமைதி’ என்பது போல மிரட்டலாக இருக்கிறார். 

சூர்யாவின் கங்குவா படத்திலும் பாபி தியோல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரினா சபலென்கா மீண்டும் சாம்பியன்!

சென்னையில் திடீர் மழை! மணலி புதுநகரில் 92 மி.மீ. மழைப் பதிவு!

எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்! - முதல்வர் ஸ்டாலின்

சொல்லப் போனால்... இன்னும் கொஞ்சம் இறக்கி வையுங்கள்!

செல்வம் சேரும் சிம்மத்துக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT