முகப்பு
செய்திகள்

7ஜி ரெயின்போ காலனி - 2: நாயகியாக அனஸ்வரா ராஜன்?

செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள 7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகத்தின் நாயகியாக அனஸ்வரா ராஜன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 23 ஆகஸ்ட் 2023, 4:37 pm IST
பகிர்:

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஜோடியாக நடித்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

சில மாதங்களாக 7ஜி ரெயின்போ காலனியின் இரண்டாவது பாகத்திற்கான திட்டத்தில் செல்வராகவன் ஈடுபட்டிருந்தார். தற்போது, கதை, திரைக்கதை பணிகள் முடிந்ததுள்ளதல் செப்டம்பர் மாத துவக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்பாகத்திலும் ரவி கிருஷ்ணாவே நாயகனாக நடிக்கிறார்.  இந்நிலையில், நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனஸ்வரா ’சூப்பர் சரண்யா’ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்.

மேலும், இந்தாண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு அடுத்தாண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments