முகப்பு
செய்திகள்

நடிகர் பிரபு மகளை மணந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகளை திருமணம் செய்துள்ளார்.

Updated On : 15 டிசம்பர், 2023 at 9:57 AM
பகிர்:

திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன்பின், சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். அப்படம் தோல்விப்படமாக அமைந்தது. 

சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில், சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

ஆதிக் ரவிச்சந்திரனும், ஐஸ்வர்யாவும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.