பார்க்கிங் வெற்றி: இயக்குநருக்கு தங்கக் காப்பினை பரிசளித்த நடிகர் ஹரிஷ் கல்யாண்!
படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குநருக்கு தங்கக் காப்பினை பரிசளித்தார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானாலும் பொறியாளன், வில் அம்பு ஆகிய படங்களில் நாயகனாக அறியப்பட்டார் ஹரிஷ் கல்யாண். 2018இல் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர். இதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.
சமீபத்தில் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க: அனிமல் 15-வது நாள் வசூல் விவரம்: ரூ.1000 கோடியை எட்டுமா?
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடித்த படம் 'பார்க்கிங்'. இப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பார்க்கிங் திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகியது. மலையாளப் படம் போன்று சிறப்பாக இருந்ததாக விமர்சனங்கள் வெளியானது.
இந்த வெற்றியினை முன்னிட்டு நடிகர் ஹரிஷ் கல்யாண் இயக்குநர் ராம்குமாருக்கு தங்கக் காப்பினை பரிசளித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.