முகப்பு
செய்திகள்

கவினின் ‘டாடா’: 3 நாள்களில் வசூல் வேட்டை!

பிக் பாஸ் கவினின் டாடா திரைப்படம் 3 நாள்களில் வசூல் வேட்டையை நிகழ்த்தியுள்ளது.

Updated On : 13 பிப்ரவரி 2023, 12:39 pm IST
பகிர்:

பிக் பாஸ் கவினின் டாடா திரைப்படம் 3 நாள்களில் வசூல் வேட்டையை நிகழ்த்தியுள்ளது.

ஒலிம்பியா மூவிஸின் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே பாபு ’டாடா’ படத்தை இயக்கியுள்ளார். கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜென் மார்ட்டினின் இசையமைத்துள்ள இப்படத்தின்  ‘டாடா பாடல்’, ‘நம்ம தமிழ் ஃபோக்’, ’கிருட்டு கிருட்டு’ ஆகிய பாடல்கள் வெளியாகின.

Advertisement

Advertisement

டாடா திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாகி, நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.  3 நாள்களில் ரூ.6 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் கவினின் திரையுலக பயணத்தின் மாபெரும் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.