முகப்பு
செய்திகள்

பிரபல நிறுவன தயாரிப்பில் ’லவ் டுடே’ ஹிந்தி ரீமேக்

லவ் டுடே ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Updated On : 22 பிப்ரவரி 2023, 3:12 pm IST
பகிர்:

லவ் டுடே ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவான திரைப்படம் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்திருந்தார்.

கடந்த நவ.4 ஆம் தேதி வெளியான இப்படம் அனைத்துத் தரப்பினரிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றது. காதலில் நம்பிக்கை எவ்வளவு முக்கியமானது என்பதைக் கருவாகக் கொண்டு உருவாகியிருந்தது.

Advertisement

Advertisement

மேலும், லவ் டுடே ரூ.100 கோடி வசூலித்து பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை ஃபாண்டோம் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஃபாண்டோம் ஸ்டூடியோஸ் குயின், உத்தா பஞ்சாப், 83 உள்ளிட்ட படங்களைத் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments