FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிக் பாஸின் முதல் இறுதிப் போட்டியாளர் யார்? ‘டிக்கெட் டூ ஃபைனல்’ வாரம்

பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைவதற்கான டாஸ்க் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், முதல் இறுதிப் போட்டியாளரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

Updated On : 2 ஜனவரி 2023, 12:58 pm IST
பகிர்:

பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைவதற்கான டாஸ்க் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், முதல் இறுதிப் போட்டியாளரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். கொண்டுள்ளனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை சாந்தி, அசல், செரினா, மகேஸ்வரி, நிவாசினி, ராபர்ட், குயின்ஸி, ராம், ஜனனி, ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி ஆகியோர் நானிமேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி.பி. முத்து தனிப்பட்ட காரணங்களால் தானாகவே போட்டியைவிட்டு விலகினார்.

Advertisement

Advertisement

12-வது வார இறுதியான நேற்று யாரும் எதிர்பாராத விதமாக மணிகண்டா வெளியேற்றப்பட்டார். அனைத்து டாஸ்க்குகளையும் வெறிதனமாக விளையாடும் மணிகண்டா, முதல்முறையாக பிக் பாஸ் தமிழில் 4 வாரம் கேப்டன் போட்டியில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், 13-வது வாரத்தில் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர். இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில், இந்த வாரம் ‘டிக்கெட் டூ ஃபைனல்’ டாஸ்க்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக இறுதி வாரத்திற்கு முன்னேறவுள்ளனர். இந்த வாரம் மற்றும் அடுத்த வார நாமினேஷனின் இடம்பெற மாட்டார்கள்.

மேலும், டிக்கெட் டூ பைனல் டாஸ்க்குகள் மிக கடுமையாக இருக்கும் என்பதால், போட்டியாளர்கள் டாஸ்க்குகளுக்கு தயாராகி வருகின்றனர்.

இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், கேப்டன் போட்டியில் அஷீம் மற்றும் ஏடிகே போட்டியிடுகிறார்கள். அதில், எடிகே வெற்றி பெறுவது போல் தெரிகிறது.

இரண்டாவது ப்ரோமோவில், நாமினேஷனில் இருந்து காப்பாற்ற ஒரு நபரை காரணங்களுடன் கூறுமாறு தெரிவிக்கிறார். 

சாதாரண டாஸ்க் கொடுத்தாலே பல வகையான பிரச்னைகள் ஏற்படும் நிலையில், டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க்கில் என்னென்ன பிரச்னைகள் வெடிக்கும் என்ற எதிர்பார்பிலும், முதல் இறுதிப் போட்டியாளரை காணவும் ரசிகர்கள் காத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments