சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் குஷி: 2வது பாடலின் ப்ரோமோ வெளியானது!
விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துள்ள குஷி படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பின்னர் அதிலிருந்து மீண்டு, பின்னர் படங்களில் நடித்து வருகிறார்.
யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: டாக்டர் படம் மாதிரி எனது நடிப்பு புதியதாக இருக்கும்: மாவீரன் குறித்து சிவகார்த்திகேயன்!
Advertisement
Advertisement
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஷிவ நிர்வாணா இயக்கி வருகிறார். ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி 70 மில்லியன் (7 கோடி) பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பினை பெற்றுவரும் நிலையில் இரண்டாவது பாடல் பற்றி படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது 2வது பாடலின் ப்ரோமோ விடியோ வெளியானது. முழுமையான பாடல் விடியோ ஜூலை 12இல் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.