விரைவில் கங்குவா கிளிம்ஸ் விடியோ
கங்குவா திரைப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
'அண்ணாத்த' படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: துருவ் விக்ரம் சம்பளம் இவ்வளவா?
Advertisement
Advertisement
இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
மேலும், கங்குவா படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்காக நடிகர் சூர்யா உடல் எடையைக் கூட்டுவதற்காக உடல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ ஒன்றை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.