முகப்பு
செய்திகள்

டி.ராஜேந்தர் குரலில் மார்க் ஆண்டனி முதல் பாடல்!

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் மார்க் ஆண்டனி படத்தில் பாடியுள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:02 PM
பகிர்:

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ‘திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார்.

இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

டைம் டிராவலை மையமாகக் கொண்டு உருவான படமாகத் தெரிகிறது. விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

இறுதிக்கட்ட டப்பிங் பணிகளை மேற்கொள்ளும் விடியோ ஒன்றை நடிகர் விஷால் சமீபத்தில் பகிர்ந்திருந்தார். இப்படம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு(செப்.15) வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘அதிருதா’ பாடலை டி.ராஜேந்திர் பாடியுள்ளதாகவும் வருகிற ஜூலை 15 ஆம் தேதி இப்பாடல் வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments