சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
சந்தானம் நாயகனாக நடித்துள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாயகனாக சந்தானம் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதற்கு முன் வெளியான ‘சபாபதி’ படமும் சரியாக கைகொடுக்கவில்லை.
இதனால், அவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நகைச்சுவை பேய் படமான ‘தில்லுக்கு துட்டு’ படம்போல் மீண்டும் ஒரு பேய் படத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: டி.ராஜேந்தர் குரலில் மார்க் ஆண்டனி முதல் பாடல்!
Advertisement
Advertisement
பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘டிடி ரிட்டன்ஸ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் பெயர் டீசரை படக்குழுவினர் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், இப்படம் வருகிற ஜூலை 28 ஆம் தேதி திரைக்கு வரும் என்றும் டிரைலர் நாளை(ஜூலை - 15) வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.