கங்குவா க்ளிம்ஸ் விடியோ: எத்தனை மணிக்கு வெளியாகும் தெரியுமா?
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் கங்குவா படத்தின் க்ளிம்ஸ் விடியோ குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடிக்கிறார்.
இதையும் படிக்க: ஜெயிலர் இசை வெளியீட்டு விழா: அதிகாரபூர்வ அறிவிப்பு
படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
Advertisement
Advertisement
மேலும், கங்குவா படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் வில்லனாக ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி(நடராஜ்) நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை நடிகர் சூர்யா பிறந்தநாளன்று (ஜூலை - 23) நள்ளிரவு 12.01மணிக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.