முகப்பு
செய்திகள்

கமர்ஷியல் படங்களில் நடிக்க விருப்பமில்லை: நடிகை சுனைனா 

நடிகை சுனைனா கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆர்வமில்லை என தெரிவித்துள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் படங்கள்  நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. 

தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட் ஆகிய இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார். 

நேரம், பிரேமம் படத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்த அனந்த் நாக் உடன் சுனைனா நடித்துள்ள படம்தான் ரெஜினா. இதில் நிவாஸ் ஆதித்தன், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

சதிஷ் நாயர் தயாரித்துள்ள இந்தப் படத்தினை இயக்குகிறார் டோமின் டி செல்வா. தயாரிப்பாளரான சதிஷ் நாயர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியப் படமாக ஜூன் 23இல் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் இதன் டீசர், டிரைலர்  நல்ல வரவேற்பினை பெற்றது. 

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் சுனைனா கூறியதாவது: 

பெரிய நடிகர்களுக்காக வெறுமனே கமர்ஷியல் படங்களில் நடிக்க விருப்பமில்லை. இதுமாதிரி வந்த வாய்ப்புகளை தட்டிக் கழித்துள்ளேன். வம்சம், நீர்ப்பறவை போன்ற படங்கள் அதனளவில் வெற்றி பெற்ற படங்களே. ஆனால் காதலில் விழுந்தேன் அளவுக்கு மற்ற படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. எனது முன்னாள் மேனஜரும் ஏன் கமர்ஷியல் படங்களில் நடிப்பதில்லை என திட்டுவார். எனக்கு அது குறித்து கவலையில்லை. நான் ஒரு ஆர்டிஸ்ட். மக்களை மகிழ்விக்க பல விதமான கதாபத்திரங்களை ஏற்று நடிக்க ஆசை. கதைக்கும், எனக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தேன். ரெஜினா படம் உங்களுக்கு பிடிக்குமென நினைக்கிறேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.