போர் தொழில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல்!
போர் தொழில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
போர் தொழில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர். இவர் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம். எஸ்டேட் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’போர் தொழில்’ திரைப்படம் ரசிகர்களிடம் ஆதரவைப் பெற்றதால் அதிக திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
ரூ.5.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் காவல் அதிகாரிகளாக அசோக் செல்வன், சரத் குமார் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விக்னேஷ் ராஜா, ஆல்பிரட் பிரகாஷ் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்கள்.
இதையும் படிக்க: மாவீரன் படத்தின் புதிய அப்டேட்!
இந்நிலையில், போர் தொழில் திரைப்படம் வரும் ஜூலை 7 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.