இறுதிக்கட்டத்தில் ‘தங்கலான்’ படப்பிடிப்பு
தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாக வைத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் பார்வதி நடிப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பாரதிராஜா இயக்கத்தில் புதிய படம்!
படத்தின் படப்பிடிப்பு தற்போது கே.ஜி.எஃப்பில் நடைபெற்று வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தில் ஆங்கில நடிகர் டேனியல் கால்டகிரோன் இணைந்தார்.
இந்நிலையில், கேஜிஎஃப்பில் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து சென்னையில் சில காட்சிகள் எடுக்கப்பட்டு படப்பிடிப்பு நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.