முகப்பு
செய்திகள்

மேன் படத்தின் படப்பிடிப்பை முடித்த ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா ‘மேன்’ படத்தின் படப்பிடிப்பினை நிறைவு செய்துள்ளார். 

Updated On : 6 மே, 2023 at 1:14 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:25 PM

நடிகை ஹன்சிகா தொழிலதிபர் சோகேல் என்பவரை கடந்தாண்டு டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண விடியோ ‘லவ் ஷாதி டிராமா’ என்கிற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.  

ஹன்சிகா தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.

‘மேன்’ எனும் தமிழ்ப் படத்தின் படப்பினை தற்போது நிறைவு செய்துள்ளார். இந்தப் படத்தில் பேஷன் டிசைனராக பணியாற்றியுள்ளார். வலுவான, தற்சார்பான, முன்னேற்றமான பெண்ணாக படத்தில் நடித்துள்ளார். 

Advertisement

இந்தப் படத்தினை கலாபக் காதலன் படத்தினை இயக்கிய இகோர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஆரி அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.  

இந்தப் படத்தில் நிர்மலா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பற்றிய படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொல்லாச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இந்தப் படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறதென நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.