காதலியுடன் நிச்சயதார்த்தம்: காளிதாஸ் ஜெயராம் பகிர்ந்த புகைப்படங்கள்!
பிரபல மலையாள நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது நீண்டநாள் காதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளர்.
பாவக் கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம். அந்தத் தொடர் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. லோகேஷ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிக்க: அதிர்ஷ்டமும் இல்லை, அறிவும் இல்லை: ஜப்பான் படத் தயாரிப்பாளரை கிண்டல் செய்யும் ரசிகர்கள்!
மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் காளிதாஸின் நடிப்பு கவனம் ஈர்த்தது. நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாடலும் நடிகையுமான தாரணி காளிங்கராயருடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்திருந்தார்.
Advertisement
Advertisement
ஓணம் பண்டிகையின்போது நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட படத்திலும் தாரணி உடனிருந்தார். அப்போதே காளிதாஸும் தாரணியும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் இருவரும் காதலிப்பது உறுதியானது.
இதையும் படிக்க: நடிகர் ரஜினி மறுத்த கதையில் சிம்பு!
இதையும் படிக்க: சித்தா: ஓடிடி அறிவிப்பு!
இந்நிலையில் தனது நீண்டநாள் காதலியுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகர் காளிதாஸ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.