முகப்பு
செய்திகள்

கமல் 234 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது!

கமல் 234 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 26 அக்டோபர் 2023, 6:59 pm IST
பகிர்:

கமல் 234 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமலுக்கான மார்கெட் மீண்டும் அதிகரித்துள்ளது.  கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. 

ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில் அறிமுக முன்னோட்ட விடியோவின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த விடியோவை கமலின் பிறந்த நாளான நவ.7-ல் வெளியிட உள்ளனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இதற்கான அறிவிப்பை, ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து ஆகிய படங்களுக்குப் பிறகு ரவி கே. சந்திரன் 3வது முறையாக மணிரத்னமுடன் இணைந்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.