சதீஷ் படத்துக்கு இசையமைக்கும் யுவன்!
சதீஷ் நடிக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சதீஷ் நடிக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
காமெடி நடிகரான சதீஷ் கதாநாயகனாக நடித்த நாய்சேகர், ஓ மை கோஸ்ட் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து வித்தைக்காரன் படத்தில் அவர் நடித்து வருகிறார். பிரவீன் சரவணன் இயக்கும் முஸ்தபா முஸ்தபா படத்திலும் நடிகர் சதிஷ் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சதீஷ் 'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜ் சேவியர் இயக்குகிறார். சென்னையில் பெரும் பொருள்செலவில் பழங்கால அரங்குகள் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், முக்கிய வேடங்களில் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: லியோ ஓடிடி தேதி இதுதானா?
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக நடிகர் சதீஷ் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.