திருமணமா? பதிலளித்த த்ரிஷா!
தன்னைக் குறித்த திருமண வதந்திகளுக்குப் பதிலளித்துள்ளார் நடிகை த்ரிஷா.
மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் தனக்கான இடத்தை தக்க வைத்தார்.
அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்துக்கு பிறகு சரியான திரைப்படம் அமையாமல் தவித்து வந்த த்ரிஷாவுக்கு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.
இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் பார்முக்கு வந்துள்ளார் த்ரிஷா.
Advertisement
Advertisement
விஜய்யின் லியோ படத்தில், மலையாளத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக ராம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். த்ரிஷாவை மையமாக கொண்ட ‘தி ரோடு’ திரைப்படம் அக்.6 ஆம் தேதி வெளியாகிறது.
மேலும், அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் படக்குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மலையாள சினிமா தயாரிப்பாளர் ஒருவரை த்ரிஷா திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது, இதற்கு த்ரிஷா, ‘வதந்திகளைப் பரப்பாமல் அமைதியாக இருங்கள்’ என லியோ போஸ்டர் வசனத்தைக் குறிப்பிட்டு இவை வெறும் வதந்திதான் என பதிலளித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.