தி ரோட் டிரைலர் வெளியீடு!
நடிகை த்ரிஷா நடிப்பில் உருவான ‘தி ரோட்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷா லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார்.
அவர் நடிப்பில் நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருக்கும் ‘தி ரோட்’ திரைப்படம் அக்.6 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
பான் இந்திய திரைப்படமாக அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் நெடுஞ்சாலையில் நிகழும் கிரைம் திரில்லர் கதையாக ‘தி ரோட்’ உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இப்படத்தில் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சாம் சி.ஸ். இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: நீதிமன்றத்தை விட விஷால் பெரிய ஆள் இல்லை: நீதிபதி கண்டிப்பு
இந்த நிலையில், ‘தி ரோட்’ படத்தின் டிரைலரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.