மூத்த நடிகர் மதுவின் 90வது பிறந்தநாள்: சினிமா பிரபலங்கள் வாழ்த்து!
லெஜெண்டரி நடிகர் மாதவன் நாயர் எனும் மதுவின் 90வது பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மாதவன் நாயர் எனும் மது 1970இல் ப்ரியா எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 59 வருடங்களாக நடித்து வருகிறார். மலையாளம், தமிழ், ஹிந்தி சினிமாக்கள் உள்பட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 12 படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர், நடிகராக மட்டுமல்லாமல் 15 படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
அவரது 400வது படமாக 2019இல் துல்கர் சல்மான் படத்தில் நடித்திருந்தார். கேரள அரசின் விருதுகள், தேசிய விருதுகள் உள்பட பல விருதுகளை வென்றுள்ளார். 2013இல் பத்ம ஸ்ரீ விருதும் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அனிமல் படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திரம் அறிமுகம்!
Advertisement
Advertisement
அவர் இயக்கிய செம்மீன் திரைப்படத்துக்காக குடியரசு தலைவரிடம் தங்கப் பதக்கம் பெற்றார். அவரது பங்களிப்பு மலையாள சினிமாவுக்கு மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே ஈடு இணையற்றதென சினிமா விமர்சகர்கள் பாராட்டுகிறார்கள்.
இதையும் படிக்க: கவனம் ஈர்க்கும் உன்னி முகுந்தனின் கந்தர்வா அறிமுக விடியோ!
நடிகர் மோகன்லால் 2022இல் தந்தையர் தின விழா வாழ்த்து தெரிவித்திருந்தார். பல படங்களில் எனக்கு தந்தையாகவும் ரோல் மாடலாகவும் இருந்தவர் மது சார் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
தமிழில் பாரத விலாஸ், தர்மதுரை, ஒரு பொண்ணு ஒரு பையன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மூத்த நடிகர் மதுவின் 90வது பிறந்தநாளுக்கு மோகன்லால் தனது பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவருடன் நடிகர் மம்மூட்டியும், “என்னுடைய சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து” எனப் பதிவிட்டுள்ளார்.