2002-ல் தமிழன் திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா, சமீபகாலமாக ஆங்கிலப் படங்கள் மற்றும் வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உலகளவில் புகழ் பெற்றுள்ளார். 2018 டிசம்பரில் பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனாஸூம் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
அமேசான் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் சிட்டாடல் தொடரில் ப்ரியங்கா சோப்ரா, சமந்தா, ரிச்சார்ட் மேட்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரூஸோ சகோதரர்கள் இயக்கும் எபிசோடில் சமந்தா, வருண் தவானும் நடிக்கிறார்கள். பிரியங்கா சோப்ரா இந்த தொடரில் முதன்மை கதாபத்திரமாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தமிழன் படப்பிடிப்பில் நடிகர் விஜய், இசையமைப்பாளர் டி.இமான் உடன் எடுத்த புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். தமிழன் திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆனதாக அதில் பதிவிட்டுள்ளார்.
தற்போது பிரான்ஸில் தனது அடுத்த படமான ஹெட்ஸ் ஆஃப் தி ஸ்டேட்ஸ் என்ற படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். உடன் மகளும் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சிட்டாடல் தொடர் நடிக்கும்போது மட்டுமே எனக்கு ஆண் நடிகர்களுக்கு சமமாக ஊதியம் கிடைத்துள்ளது என சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழன் படப்பிடிப்பில் நடிகர் விஜய் மிகவும் தன்மையுடன் நடந்து கொண்டதாகவும் படப்பிடிப்பு முடிந்த பிறகே அந்த இடத்தைவிட்டு கிளம்புவார்; அதுவரை அங்கேயே இருப்பார். எனக்கு தமிழ் தெரியாததால் கடினமாக இருந்தது” என சமீபத்திய நேர்காணல் ஒன்றிலும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.