முகப்பு
செய்திகள்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

12த் பெயில் திரைப்படம் திரையரங்குகளில் 180 நாள்களைக் கடந்துள்ளது.

Updated On : 25 ஏப்ரல் 2024, 4:58 pm IST
பகிர்:

பாலிவுட்டில் பிரபல இயக்குநரான விது வினோத் சோப்ரா இயக்கத்தில் கடந்த அக்.27 ஆம் தேதி வெளியான திரைப்படம் 12த் ஃபெயில். 

12 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மணிஷ் சர்மா என்பவர், தன் கடும் முயற்சிகளால் ஐபிஎஸ் அதிகாரியான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

நாயகனாக விக்ராந்த மாசே நடித்த இப்படம் இந்திய அளவில் கவனம் பெறத் துவங்கியதும் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். 

Advertisement

Advertisement

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், 12த் பெயில் திரைப்படம் திரையரங்குகளிலேயே 180 நாள்களை நிறைவு செய்து அசத்தியுள்ளது.

இப்படம், உலகளவில் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகவும் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.