முகப்பு
செய்திகள்

விஜய் தேவரகொண்டா 12: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் அவரது 12ஆவது படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:26 AM
விஜய் தேவரகொண்டா 12 போஸ்டர். - படம்: இன்ஸ்டா / விஜய் தேவரகொண்டா
பகிர்:

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா. இவரது 13வது திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஜூனில் வெளியானது. 

2019இல் தெலுங்கில் வெளியான ‘ஜெர்ஸி’ திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னானுரியின் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

நானி நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சமீபத்தில் இலங்கையில் துவங்கியுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டா இதற்கிடையில் 13ஆவது படமென அறிவித்த பேமிலி ஸ்டார் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். இவர் சப்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் பிரபலமானார். தமிழில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சசிகுமார் உடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்தப்படம் 2025 மார்ச் மாதம் 28ஆம் நாள் வெளியாகுமென அத்காரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தோற்றதில் இருக்கு புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தலைப்பு இந்த மாதமே அறிவிக்கப்டுமெனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.