கூலி படத்தில் இணையும் பான் இந்திய நடிகர் யார்?
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் புதிதாக இணையவுள்ள நட்சத்திர நடிகர் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இதற்கிடையே, படத்தின் இந்தியளவு வணிகத்திற்காக பிற மொழி நட்சத்திர நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முயன்று வருவதாகத் தகவல் வெளியானது.
முக்கியமாக, கூலி படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவர் மறுத்ததாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து, கூலி படத்தில் புதிதாக இணைய உள்ள அந்த நட்சத்திர நடிகர் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.