FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் 8: புதிய சாதனை படைத்த ஜாக்குலின்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 12வது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், ஜாக்குலின் புதிய சாதனை படைத்துள்ளார்.

Updated On : 23 டிசம்பர் 2024, 4:37 pm IST
ஜாக்குலின் - படம் | எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 12வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஜாக்குலின் புதிய சாதனை படைத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதல் அனைத்து வாரங்களிலும் ஜாக்குலின் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார். அதிகப்படியான வாக்குகளைப் பெற்று ஒவ்வொரு முறையும் வெளியேறுவதிலிருந்து காக்கப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் வரலாற்றில் ஒரு போட்டியாளர் இத்தனை முறை தொடர்ந்து நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றதில்லை. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜாக்குலின் புதிய சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

Advertisement

Advertisement

ஒவ்வொரு வாரமும் ஜாக்குலின்

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக இருபோட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனிடையே 11வது வார இறுதியான நேற்று ரஞ்சித் மட்டுமே வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடந்து 12வது வாரத்தில் 12 போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர்.

இவர்களுக்கான நாமினேஷன் செய்யும் பணிகள் முதல் நாளில் நடைபெற்றது. இதில், அன்ஷிதா, விஜே விஷால், ஜாக்குலின், ஜெஃப்ரி, ராணவ், மஞ்சரி, பவித்ரா ஜனனி என 7 போட்டியாளர்கள் இந்த வாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜாக்குலின் - படம் | எக்ஸ்

ஜாக்குலின் படைத்த சாதனை

நடிகை ஜாக்குலின் இந்த வாரமும் தொடர்ந்து நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 12 வாரங்களுக்கு அவர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இதுவரை எந்தவொரு போட்டியாளரும் 12 முறை இவ்வாறு பிக் பாஸ் வீட்டில் விளையாடத் தகுதியற்ற நபர்களின் பட்டியலில் இடம்பெற்றதில்லை. எனினும் ஒவ்வொரு முறையும் அவர் ரசிகர்களால் வாக்களித்து காக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றாலும் ரசிகர்களால் காக்கப்படும் நபராக ஜாக்குலின் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க |பிக் பாஸ் 8: 12வது வாரத்தில் வெளியேறக் காத்திருக்கும் போட்டியாளர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments