முகப்பு
செய்திகள்

விஷாலின் ரத்னம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் ரத்னம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 ஜனவரி 2024, 2:20 pm IST
பகிர்:

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் ரத்னம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மார்க் ஆண்டனி’  படத்தைத் தொடர்ந்து விஷால் ஒப்பந்தமான படம் ரத்னம். இந்த படத்தை ஹரி இயக்கி வருகிறார். தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். 

மேலும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்துக்கு தேவி பிரசாத் இசையமைக்க சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் கார்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 

Advertisement

Advertisement

ரத்னம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் ஹரி முன்னதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இப்படம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.