விஜய் ஆண்டனியின் ஹிட்லர்: கவனம் ஈர்க்கும் முதல் பாடல்!
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட்லர் படத்தின் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி ‘ரத்தம்’ படம் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது.
தொடர்ந்து, ‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் ‘ஹிட்லர்’ என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
செந்தூர் ஃபிலிம் இண்டர்னேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் முன்னதாக வெளியானது.
Advertisement
Advertisement
இதன் முதல் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. விவேக் மெர்வின் இசையமைத்துள்ல இந்தப் பாடலை கு. கார்த்திக் எழுதியுள்ளார். பிரபல நடன இயக்குநர் பிருந்தா இந்தப் பாடலுக்கு நடனத்தை சிறப்பாக அமைத்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.