முகப்பு
செய்திகள்

மெட்ரோ நடிகர் சிரிஷ் திருமணம்!

மெட்ரோ படத்தில் நடித்த சிரிஷுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

Updated On : 13 ஜூலை, 2024 at 5:36 AM
மெட்ரோ நடிகர் சிரிஷுக்கு திருமணம்
பகிர்:

2016இல் வெளியான மெட்ரோ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் நாயகனாக சிரிஸ் நடித்திருந்தார். சென்னை மாநகரத்தில் நடைபெறும் நகைக் கொள்ளை குறித்து அற்புதமாக எடுத்திருந்தார்கள். இந்தப் படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியிருந்தார்.

மெட்ரோ படத்துக்குப் பிறகு ராஜா ரங்குஸ்கி, பிளட்டி மனி, பிஸ்தா ஆகிய படங்களில் சிரிஷ் நடித்துள்ளார். ஆனால் மெட்ரோ திரைப்படம் அளவுக்கு எந்தப்படமும் ஹிட் அடிக்கவில்லை.

இந்நிலையில் சிரிஷுக்கு சென்னையில் நேற்று ஹஸ்னா உடன் திருமணம் நடைபெற்றது. திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

முழு கட்டுரையைப் படிக்க →