காதலியுடன் அர்ஜுன் தாஸ்!
நடிகர் அர்ஜுன் தாஸ், தன் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து கவனிக்கப்பட்டார்.
தொடர்ந்து, அநீதி, ரசவாதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அர்ஜுன் தாஸ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அதில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ஒன்றையும் இணைத்து காதல் குறியீட்டுடன் பதிவிட்டுள்ளார்.
இதனால், அர்ஜுன் தாஸ் தன் காதலியுடன் இருப்பது உறுதியாகியுள்ளது.
முன்னதாக, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இவருடன் எடுத்த புகைப்படத்துடன் இதயக் குறியீட்டை இணைத்ததால், இருவரும் காதலிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என ஐஸ்வர்யா லட்சுமி விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.