FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஹன்சிகாவின் ‘காந்தாரி’ மேக்கிங் விடியோ!

டிகை ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள காந்தாரி படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

1 ஜூன் 2024, 10:09 am
பகிர்:

தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஹன்சிகா, அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். 2022இல் ஜெய்ப்பூர் அரண்மனையில் இவருக்கு திருமணம் நடைபெற்றது.

சமீபத்தில், மை 3 வெப் என்ற வெப் தொடரிலும் நடித்து இருந்தார். சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை - 2 படத்தில் பேயாக ஹான்சிகா நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து கார்டியன் படத்திலும் பேயாக நடித்திருந்தார். இது கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Advertisement

Advertisement

தற்போது காந்தாரி எனும் படத்தில் நடித்துள்ளார். ஆர் கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். மெட்ரோ சிரிஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இசை- முத்து கணேஷ். படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்தப் படம் வரும் ஜூலை மாதம் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.