மகாராஜாவைக் கைப்பற்றிய ஓடிடி! வெளியீடு எப்போது?
மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமம் மற்றும் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கில் தயாரான இப்படத்தின் திரைக்கதை உருவாக்கமும் நடிகர்களின் நடிப்பும் பேசப்பட்டு வருகின்றன. இப்படம் ரூ.70 கோடி வரை வசூலித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மகாராஜா ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், இப்படம் ஜூலை இரண்டாம் வாரத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.