விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர்!
இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கவுள்ளார். ‘நேசிப்பாயா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார்.
காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் ஜூன் 28 ஆம் தேதி வெளியாகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.