செய்திகள்

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

நடிகர் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு ரஷியாவில் துவங்க உள்ளதாகத் தகவல்

DIN

நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்திற்கு, ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன், போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், விடாமுயற்சி திரைப்படமும் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, குட் பேட் அக்லியின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் துவங்கும் எனக் கூறப்படுகிறது. அங்கு, நடிகர் அஜித்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாத்மா காந்தி நினைவு நாள்! RN Ravi மரியாதை!

இது தெரியுமா? தொலைபேசியை எடுத்தவுடன் ஹலோ என்று சொல்வது ஏன்?

சேட்டன் வருகிறார் வழி விடுங்க... சாம்சனுக்குப் பாதுகாவலராக மாறிய சூர்யகுமார்!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறி; உரிய நேரத்தில் கூட்டணி அறிவிப்பு! - பிரேமலதா விஜயகாந்த்

அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு நாப்கின் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT