கேம் சேஞ்சர் டீசர் எப்போது!
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரணை வைத்து பான் இந்தியா படமான 'கேம் சேஞ்சர்' என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை 19% அதிகரிப்பு!
நாயகியாக கியாரா அத்வானி நடிக்க, படத்தில் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
பான் இந்தியா படம் என்பதால் லக்னோவில் வைத்து படத்தின் டீசர் வெளியீட்டை வரும் நவம்பர் 9 ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்தநிலையில் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டீசர் வரும் நவம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.