முகப்பு
செய்திகள்

நடிகர் பிரதீப் ஆண்டனி திருமணம்!

நடிகர் பிரதீப் ஆண்டனி திருமணம் குறித்து...

Updated On : 7 நவம்பர் 2024, 4:27 pm IST
மணக்கோலத்தில் பிரதீப் ஆண்டனி.
பகிர்:

நடிகர் பிரதீப் ஆண்டனியின் திருமணம் இன்று நடைபெற்றது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மக்களின் அதிக வரவேற்பைப் பெற்ற போட்டியாளரான பிரதீப் ஆண்டனி, சில காரணங்களால் அதிரடியாக அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தகாத வார்த்தைகள் பயன்படுத்துகிறார், அவரால் பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் மீது சக போட்டியாளர்கள் முன்வைத்தனர்.

Advertisement

Advertisement


இதனால் பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இதற்கு பிரதீப்பின் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. ஒரு படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்த நிலையில், பிரதீப் ஆண்டனி தன் காதலியான பூஜாவை இன்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துள்ளார். அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments