செய்திகள்

‘அடடடா...’ பாடலைப் பாடும் நயன்தாரா மகன்கள்!

நயன்தாரா மகன்களின் விடியோ வைரல்...

DIN

நடிகை நயன்தாராவின் மகன்கள் பாடும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் 2022, ஜூன்  9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் என இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். 

சில மாதங்கள் கழித்து வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகினர். உயிர், உலக் என பெயரிடப்பட்டுள்ள மகன்களின் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு விக்னேஷ் சிவனும் நயனும் மகிழ்ச்சியடைகின்றனர்.

சமீபத்தில் இவர்களின் திருமண விடியோ நெட்பிளிக்ஸில் வெளியானது.

இந்த நிலையில், விக்னேஷ் சிவன் தன் மகன்கள் இருவரும் நானும் ரௌடிதான் படத்தில் இடம்பெற்ற, ‘தங்கமே உன்னத்தான்’ பாடலில் இடம்பெற்ற, ‘அடடடா... அய்யய்யோ...’ வரிகளைப் பாடும் விடியோவை வெளியிட்டுள்ளார்.

குழந்தைகள் இருவரும் மழலைக்குரலில் வரிகளைப் பாடிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடா் மழை: வீடு இடிந்து சேதம்

கலசப்பாக்கம், போளூரில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவா் கைது

ராமாலை விஜயநகரத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT