நேரடியாக ஓடிடிக்கு வரும் இந்தியன் - 3?
இந்தியன் - 3 புதிய தகவல்....
இந்தியன் - 3 படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ஜூலை 12 அன்று உலகம் முழுவதும் வெளியானது.
இந்தப் படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும், ரூ. 180 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்தியன் - 2 படத்துக்குக் எதிர் விமர்சனங்கள் கிடைத்தாலும், இந்தியன் - 3 டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இதனால், இயக்குநர் ஷங்கர் இந்தியன் - 3ல் ஏற்கனவே படம்பிடிக்கப்பட்ட காட்சிகளில் சிலவற்றை மாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக நடிகர் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீண்டும் சில நாள்கள் படப்பிடிப்பை நடத்தும் முடிவில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், இந்தியன் - 2 படத்தின் வணிக தோல்வியால் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக இந்தியன் - 3 படத்தை அவர்கள் குறைந்த விலைக்குக் கேட்பதாகவும் கூறப்பட்டது.
இதனால், இந்தியன் - 3 படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.