கூலியில் அமீர் கான்!
கூலி படத்தில் அமீர் கான் நடிப்பதாகத் தகவல்...
நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தில் நடிகர் அமீர் கான் நடிக்க உள்ளதாகத் தகவல்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீர் உடல்நிலை காரணமாக ரஜினிகாந்த் ஓய்வெடுத்து வருகிறார். இதனால், சில நாள்களுக்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: என்னுடைய ஆக்சன் படத்தை இன்னும் எடுக்கவில்லை: லோகேஷ் கனகராஜ்
இதற்கிடையே, கூலியில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் அமீர் கான் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
தற்போது, இத்தகவல் உண்மை என்றும் சிறப்புத் தோற்றத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் அமீர் கான் நடிக்கவுள்ளதாகவும் இக்கதாபாத்திரத்தை எல்சியூ சினிமாவுக்கள் கொண்டுவர லோகேஷ் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.