முகப்பு
அம்ரித் ராம்நாத்.
செய்திகள்

சித்தார்த் - 40 படத்துக்கு இசையமைக்கும் பாம்பே ஜெயஸ்ரீ மகன்!

சித்தார்த் - 40 அப்டேட்....

செய்திகள்

சித்தார்த் - 40 படத்துக்கு இசையமைக்கும் பாம்பே ஜெயஸ்ரீ மகன்!

சித்தார்த் - 40 அப்டேட்....

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:13 AM
அம்ரித் ராம்நாத்.
பகிர்:

சித்தார்த் - 40 படத்தின் இசையமைப்பாளர் அறிவிக்கபட்டுள்ளார்.

நடிகர் சித்தார்த் சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமல்ஹாசனுடன் இந்தியன் - 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், கடும் விமர்சனங்களே கிடைத்தன. அடுத்ததாக, சித்தார்த் நடிப்பில் ‘மிஸ் யூ’ என்கிற படம் தயாராகி வருகிறது.

இந்த நிலையில், சித்தார்த்தின் 40-வது படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்குகிறார்.

இதில் நடிகர்கள் சரத்குமார், தேவயாணி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சர் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைக்க உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அம்ரித் மலையாளத்தில் வர்ஷங்களுக்கு ஷேஷம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சித்தார்த் - 40 படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →