ஆச்சரியப்படுத்தும் லப்பர் பந்து வசூல்!
லப்பர் பந்து வசூல் குறித்து...
லப்பர் பந்து திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உள்ளூர் அளவிலான ரப்பர் பந்து கிரிக்கெட்டையும் குடும்பத்தையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
செப். 20 ஆம் தேதி வெளியான இப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்த காட்சிகள், இளையராஜா பாடல்கள், அட்டகத்தி தினேஷ் கதாபாத்திரம் என வரவேற்பைப் பெறக்கூடிய விஷயங்கள் இடம் பெற்றிருந்தன.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: சமந்தாவின் சிட்டாடல் இணையத் தொடர் டிரைலர்!
ரசிகர்களைத் தாண்டி இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோரும் பாராட்டியிருந்தனர். தொடர்ந்து, படத்திற்கான திரைகள் அதிகரித்தன.
இப்படத்திற்குப் பின் கார்த்தியின் மெய்யழகன், விஜய் ஆண்டனியின் ஹிட்லர், ரஜினியின் வேட்டையன் படங்கள் வெளியாகின. ஆனாலும், இன்று வரை லப்பர் பந்து திரைப்படம் திரையரங்குகளில் ஒரு காட்சியாவது திரையிடப்பட்டு வருகிறது.
ரூ. 8 கோடி பட்ஜெட்டுக்குள் உருவான இப்படம் இதுவரை ரூ. 38 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், லப்பர் பந்து இந்தாண்டின் சிறந்த வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இப்படம் வருகிற அக்.18 ஆம் தேதி டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.