FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அமரன் படத்தின் புதிய பாடல்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.

Updated On : 17 அக்டோபர் 2024, 11:55 am IST
அமரன் படத்தின் பாடலில் இருந்து சில காட்சிகள்...
பகிர்:

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.

அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கதையின் நாயகியான சாய் பல்லவியின் அறிமுக விடியோ சமீபத்தில் வெளியாகியது.

சமீபத்தில், முதல் பாடலான ‘ஹே மின்னலே’ பாடல் வெளியானது. ஜி. வி. பிரகாஷின் 700-வது பாடலாக இது உருவாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, வெண்ணிலவு சாரல் எனும் பாடல் வெளியாகியுள்ளது. யுகபாரதி எழுதிய இந்தப் பாடலை கபில் கபிலன், ரக்‌ஷிதா சுரேஷ் இணைந்து பாடியுள்ளார்கள்.

படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய் ராம் கல்லூரியில் வரும் அக்.18ஆம் தேதி நடைபெறுமென தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments