நடிகர் விஜய், அஜித்துடன் வெங்கட் பிரபு. Venkat Prabhu/X
செய்திகள்

நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அஜித்!

கோட் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், விஜய்க்கு அஜித் வாழ்த்து தெரிவித்தது பற்றி..

DIN

நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகர் அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் வாழ்த்து தெரிவித்த செய்தியை கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பிறகு விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள முதல் படம் என்பதால், கோட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், உலகம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த எனது அஜித் அண்ணாவுக்கு நன்றி என்று வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ரசிகர்களுக்கு செய்தி பகிர்ந்துள்ள வெங்கட் பிரபு, “கோட் திரைப்படம் பார்ப்பதற்கு முன்னதாக, நீங்கள் வேறெந்த திரைப்படமும் பார்க்கத் தேவையில்லை. சாதாரணமாக வந்து படத்தை கொண்டாடுங்கள், தளபதியை கொண்டாடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு, “அஜித் சாருக்கு கோட் படத்தின் டிரைலரை அனுப்பி வைத்தேன். அதைப் பார்த்துவிட்டு அருமையாக இருக்கிறது என்றதுடன் நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளைப் கூறுங்கள்” என தெரிவித்ததைப் பகிர்ந்திருந்தார்.

மேலும், கோட் படத்தில் நடிகர் அஜித்தின் ஒரு மொமண்ட் (தருணம்) இருக்கிறது என்று நேர்க்காணல் ஒன்றில் வெங்கட் பிரபு பகிர்ந்திருந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிசி-என்சிஎல் தகுதிச் சான்றிதழ் பெறுவது எப்படி?

என்டிஏ கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன்!

அரசுப் பேருந்துகளை இயக்க பெண் ஓட்டுநர்கள்: ஒடிசா அரசு அதிரடி!

மறுவெளியீட்டில் வசூல் சாதனை செய்யுமா மங்காத்தா?

இயக்குநர் பிரவீன் பென்னெட்டின் அழகே அழகு: ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT