ஜீனி படத்தின் புதிய போஸ்டர் 
செய்திகள்

ஜெயம் ரவி பிறந்தநாளில் ஜீனி படத்தின் புதிய போஸ்டர்! ரிலீஸ் எப்போது?

நடிகர் ஜெயம் ரவியின் பிறந்த நாளில் ஜீனி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் ஜெயம் ரவியின் சைரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

நடிகர் ஜெயம் ரவி தற்போது அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ’ஜீனி’ என்கிற ஃபேண்டசி படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நாயகிகளாக கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கேபி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை இயக்குகிறார் அர்ஜுனன் ஜூனியர். இவர் மிஷிகினிடன் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேல்ஸ் இண்டர்நெஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படமே ஜெயம் ரவியின் பெரிய படமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

'ஜீனி' திரைப்படம், திரையரங்க உரிமைகளை தவிர்த்து ஏற்கனவே ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஜெயம் ரவி பிறந்த நாளில் இந்தப் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிர்வாகம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகுமென தெரிவித்துள்ளது.

நடிகர் ஜெயம் ரவி, நேற்று (செப்.9) தனது மனைவியைப் பிரிவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஜெயம் ரவி பிரதர், காதலிக்க நேரமில்லை படங்களில் நடித்து முடித்துள்ளார்.

பிரதர் படத்தில் பால் டப்பா எழுதி பாடிய மக்காமிஷி எனும் பாடல் இன்ஸ்டாவில் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முக்கிய மசோதாக்களை கூட்டத்தொடரின் கடைசி நாள்களில் தாக்கல் செய்யலாமா? -கனிமொழி எம்.பி. கண்டனம்!

வெட்கச் சிரிப்பில்.... அனுமோள்!

அக்னி - 5 ஏவுகணைச் சோதனை வெற்றி!

வளர்ப்பு நாய்கள் வைத்திருப்போருக்கு... சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!

ஆந்திரம்: குளத்தில் மூழ்கி 6 குழந்தைகள் பலி!

SCROLL FOR NEXT