எஸ்கே - 21 டீசர் எப்போது?
நடிகர் சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் டீசர் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததுடன் இதுவரை ரூ.78 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
அடுத்ததாக, சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் மற்றும் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் பெயர் அறிவிப்பு டீசரைப் பார்த்த இயக்குநர் நெல்சன் படக்குழுவைப் பாராட்டியிருந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ரூ.80 கோடி வசூலித்த அயலான்!
இந்நிலையில், எஸ்கே - 21 டீசரைக் குடியரசு நாளான ஜன.26 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ராணுவ பின்னணியில் உருவாகி வருவதால் இத்தேதியில் டீசர் வெளியாகவே அதிக வாய்ப்பு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.