முகப்பு
செய்திகள்

ஃபாசில் ஜோசஃபின் மரண மாஸ் டிரைலர்!

மரண மாஸ் டிரைலர் குறித்து...

Updated On : 2 ஏப்ரல் 2025, 10:51 am IST
பகிர்:

நடிகர் ஃபாசில் ஜோசஃப் நடித்த மரண மாஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநராக அறியப்பட்ட ஃபாசில் ஜோசஃப் தற்போது மலையாள சினிமாவில் நடிகராகக் கலக்கி வருகிறார். எந்தப் படத்தில் நடித்தாலும் தன் தனித்துவமான சிரிப்பு மற்றும் உடல் மொழியால் கதையின் தரத்திற்கு மேலும் வலு சேர்த்து விடுகிறார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான சூட்சுமதர்ஷினி, பொன்மேன் ஆகிய படங்கள் ஹிட் அடித்ததுடன் தமிழகத்திலும் அவருக்கு ரசிகர்களைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement

அடுத்ததாக, இயக்குநர் சிவபிரசாத் இயக்கத்தில் ஃபாசில் நடித்த மரண மாஸ் ஏப். 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

நகைச்சுவை திரைப்படமாக உருவான இப்படத்தை நடிகர் டொவினோ தாமஸும் இணைந்து தயாரித்துள்ளார்.

முன்னதாக, மரண மாஸ் படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், டிரைலரை வெளியிட்டுள்ளனர். ஃபாசிலுடன் ராஜேஷ் மாதவன், அனிஷா அனில்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.