முகப்பு
செய்திகள்

கேங்கர்ஸ் டிரைலரில் ரசிகர்களை ஈர்த்த வடிவேலு!

கேங்கர்ஸ் டிரைலர் குறித்து...

Updated On : 2 ஏப்ரல், 2025 at 12:51 PM
வடிவேலு
பகிர்:

கேங்கரஸ் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கியுள்ள திரைப்படம் கேங்கர்ஸ்.

முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக சுந்தர். சி, நாயகியாக கேத்ரீன் தெரசா முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisement

ஏப். 24 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் நேற்று(ஏப். 1) வெளியானது.

மாமன்னனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வடிவேலு பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளில் வடிவேலுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நகைச்சுவைக் படங்களும் காட்சிகளும் அமையவில்லை.

ஆனால், கேங்கர்ஸ் டிரைலரில், ‘கழுத்துக்குக் கீழ யோகா பண்றேங்க’ போன்ற வடிவேலுவின் வசனங்களும் வித்தியாசமான தோற்றங்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.